சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமை (ஏப்.11) வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொலைதூரக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கும், எம்ஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றன.

அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, சிலர் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். அதன் முடிவுகள் www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *