velsதமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று முன் தினம் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் அவர்கள் சட்டக்கல்லூரியின் 5 ஆண்டு எல்.எல்.பி. படிப்புச் சேர்க்கை அனுமதியை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் இந்த விழாவில் பேசியபோது, ” சட்டக் கல்லூரியில் படிக்க வரும் மாணவர்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். வழக்குரைஞர் பணி புனிதமான பணி. பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு தீர்வு காண முடியாத மக்களுக்கு உதவிடும் உயர்ந்த பணி. இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெரும்பான்மைத் தலைவர்களும், தியாகிகளும் வழக்குரைஞர்களாகத் திகழ்ந்தவர்கள். பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்லாது ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் நோக்கில் படித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகத் திகழுங்கள் என்று கூறினார்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் இந்த விழாவில் பேசியபோது, “நடப்பு ஆண்டில் 5 ஆண்டு எல்.எல்.பி. படிப்பைத் தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பைத் தொடங்க உள்ளோம். சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் இந்த விழாவில் விழாவில், அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வேல்ஸ் சட்டக் கல்லூரி ஆலோசகருமான வி.விஜயகுமார், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.தமிழ்அரசன், இணை துணைவேந்தர் ஜோதிமுருகன், சட்டக் கல்லூரி இயக்குநர் தில்ஷத் ஷேக் உள்பட பலர் பங்கேற்றனர்.

English Summary:College Of Law Starts at University of Vels.