தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் 253 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்பட மொத்தமுள்ள 263 கூட்டுறவு சங்கங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக்ககுழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் செப்டம்பர் 8ஆம் தேதி கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் தற்போது புதியதாக துவக்கப்பட்டுள்ள 253 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 8 கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 4 கூட்டுறவு சங்கங்கள், மீன்வளத்துறை ஆணையர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி)யின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு கூட்டுறவு சங்கம் ஆக 267 கூட்டுறவு சங்கங்களில் 2913 நிர்வாகக்குழு உறுப்பினர்களும், இவர்களில் 267 தலைவர் மற்றும் 267 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் 2ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு செப்டம்பர் 8ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் எண்ணும் பணி செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்று, முடிவுகள் அன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் ம.ரா.மோகன் மேலும் கூறியுள்ளார்.

English Summary : Election Commissioner has announced that Cooperative Association elections will be held on Sep 8th.