இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. அதன்பின் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இணைந்து தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 4-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 21-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 4-ந்தேதி தொடங்குகிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் விவரம்:-
டெஸ்ட் தொடர் :
முதல் டெஸ்ட் – அக்டோபர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை – ராஜ்கோட்
இரண்டாவது டெஸ்ட் – அக்டோபர் 12-ந்தேதி முதல 16-ந்தேதி வரை – ஐதராபாத்
ஒருநாள் கிரிக்கெட் தொடர் :
முதல் ஒருநாள் போட்டி – அக்டோபர் 21-ந்தேதி – கவுகாத்தி
2-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 24-ந்தேதி – இந்தூர்
3-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 27-ந்தேதி – புனே
4-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 29-ந்தேதி – மும்பை
5-வது ஒருநாள் போட்டி – நவம்பர் 1-ந்தேதி – திருவனந்த புரம்
டி20 கிரிக்கெட் தொடர் :
முதல் டி20 போட்டி – நவம்பர் 4-ந்தேதி – கொல்கத்தா
2-வது டி20 போட்டி – நவம்பர் 6-ந்தேதி – லக்னோ
3-வது டி20 போட்டி – நவம்பர் 11-ந்தேதி – சென்னை