சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் விலை குறைவதை தடுக்க அதன் உற்பத்தியைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிடப்பட்டது, இதுகுறித்து ஆலோசனை செய்ய நேற்று கத்தார் தலைநகர் தோஹாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெட்ரோல் உற்பத்தி செய்யும் 18 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 30 டாலர்களுக்கும் கீழாக சமீபத்தில் சரிந்தது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர்த்துவதற்காக கச்சா எண்ணெய் உற்பத்தியை சில மாதங்களுக்கு எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்ததால் அதன் விலை கொஞ்சம் கொஞ்சமாக ஏறி தற்போது பேரல் ஒன்றுக்கு 40 டாலராக உள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறையாமல் தடுக்க உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் சமீபத்தில் கூடி ஆலோசனை செய்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி அல் நைமி, நைஜீரியா, வெனிசுலா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பெட்ரோலியத்துறை அமைச்சர்கள் தோஹா நகருக்கு வந்தனர்.

கத்தார் நாட்டின் எரிபொருள் மற்றும் தொழில்துறை மந்திரியின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு தர முடியாது என்று ஈரான் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில், நேற்று தோஹாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், பெட்ரோல் உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடர்பான புதிய செயல் திட்டத்தை வகுக்க நாளாகலாம் என்பதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும் இப்போதைக்கு இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை நிறுத்தாமல் பிற நாடுகள் மட்டும் உற்பத்தியை நிறுத்தி வைப்பதால் சர்வதேச சந்தை விலையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வரும் நாட்களில் விலை குறையும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்திய கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.2650ஆம் இருந்தது. இன்று மகாவீர் தினத்தை முன்னிட்டு வர்த்தக விடுமுறை தினம் ஆகும்.

English Summary: Negotiation Fails,crude oil prices may cut loose