சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த சில தினங்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இரண்டே 2.25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

தினசரி சராசரியாக 80 ஆயிரம் முதல் 1 லட்சத்தை நெருங்கும் அளவிற்கு பக்தர்கள் எண்ணிக்கை உள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் நேற்று வரையிலான 27 நாட்களில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 113 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இதுவரை 16 லட்சத்து 20 ஆயிரத்து 433 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை துரித படுத்தும் பணிகள் கேரள அரசு சார்பிலும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டு சார்பிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சபரிமலையில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாகவும் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் தேவசம்போர்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *