கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருப்பதால் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை ரயில்பாதை அமைக்கப்பட்டு இந்த தடத்தில் ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க கடந்த வாரம் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 7.22 கி.மீ. தொலைவு உள்ள இந்த ரயில் பாதையில் முதல்கட்ட ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையான குழுவினர் கடந்த ஏப்ரல் மாதமும், அதற்கு முன்பும் இரண்டு கட்டமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ரயில் பாதையில் ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள், சிக்னல் போன்ற செயல்பாடுகள் , ரயில் நிலைய கட்டுமானங்கள், தொழில் நுட்ப வசதிகள் ஆகியவை குறித்த திருப்திகரமான அறிக்கை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனவே அனைத்து பணிகளும் நிறைவு அடைந்ததை அடுத்து கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான ரயில் பாதையை அடுத்த வாரம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Did Metro Rail between Chennai Koyambedu to Aalandhur might start in first week of June?