பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பின்னி 44 ரன்களைக் குவித்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டீவன் ஃபின் 5 விக்கெட் மற்றும் ஆண்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணியில் மொயீன் அலி மட்டுமே 8 ரன் இருந்தபோது பின்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெல்(88), ஜேம்ஸ் டெய்லரை(56) இந்தியாவின் பவுலிங்கை சாதாரணமாக எதிர்கொண்டு இங்கிலாந்து வெற்றியை எட்டியது.