தொலைத்தொடர்பு மார்க்கெட்டிற்குள் இரங்கி ஏற்கனவே ஜாம்பவான்களாக இருந்த அணைத்து நிறுவனங்களையும் துவம்சம் செய்துள்ளது ஜியோ. இந்நிலையில் வரும் தீபாவளி சிறப்பு சலுகையாக, 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாயஸ் கால், எஸ்எம்எஸ் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது.

1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், வருடம் முழுவதும் தினமும் 1.5 ஜிபி 4ஜி இன்டெர்நெட் வழங்குகிறது. அதாவது, 365 நாட்களுக்கு 547.5 ஜிபி இண்டெர்நெட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமா.? அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் தினமும் 100 எஸ்எம்எஸ் ப்ரீ என்றால் பாருங்களேன்.ஜியோவின் இந்த ஆபரை போன்றே பிஎஸ்என்எல் நிறுவனமும், சலுகை அறிவித்து இருந்தாலும், அதற்கான திட்டம் ரூ. 2000 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தீபாவளி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக கேஷ்பேக் ஆபரும் அறிவித்து உள்ளது. அதன்படி, 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 100% கேஷ்பேக் ஆஃபர் பெறமுடியும்.மேலும் நாம் ரீசார்ஜ் செய்யும் தொகையை பொருத்து, அந்த தொகைக்கு ஈடாக கேஷ் பேக் ஆபரை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *