மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை தடை செய்யலாம் என அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.
இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை என்று முடிவெடுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன
இந்தத் தடை உத்தரவினால் 6,000 பிராண்டுகள் பாதிக்கப்படும். இதில் வலிநிவாரணை சாரிடான், சரும நோய் கிரீம் பாண்டெர்ம், சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குளூகோனாம் பி.ஜி., ஆண்டிபயாடிக் லுபிடிகிளாக்ஸ், பாக்டீரியா எதிர்ப்பு டேக்சிங் ஏ.இசட். ஆகிய புகழ்பெற்ற மருந்துகள் அடங்கும்.
பென்சிடில் காஃப் லிங்க்டஸ், டி கோல்ட் டோட்டல், கோரெக்ஸ் காஃப் சிரப் ஆகியவை தடையிலிருந்து தப்பித்தன.
தடைசெய்யப்பட்ட மருந்துகள் ரூ.2500 கோடி மதிப்பு கொண்டவை. இது பன்மலையின் ஒரு முகடு என்றே கருதப்படுகிறது.
ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்ற FDC மருந்துகள் இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்துச் சந்தையில் 1.3 ட்ரில்லியன் பங்கு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.