சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை நேற்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சரியாக பகல் 12.16 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்பட்டது. இந்த முதல் மெட்ரோ ரெயிலை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பிரீத்தி என்பவர் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ஏற்கனவே செய்துவந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் வேலைக்கு மனு செய்த ப்ரீத்தி அதிர்ஷ்டவசமாக இந்த பணியில் அமர்த்தப்பட்டார். மெட்ரோ ரயில்களை இயக்கும் ஓட்டுனர்களில் இவர் ஒருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், இதற்கான தனிப் பயிற்சிகளை நிறைவு செய்து, சென்னையின் முதல் மெட்ரோ ரெயிலை இயக்கியவர் என்ற சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் பிரீத்தி, என்பது குறிப்படத்தக்கது.

English Summary : Preethi from Saidapet, Chennai set a record by operating the first metro train started yesterday between Alandur to Koyambedu.