எட்டு வருடங்களுக்கு பின்னர் ஜோதிகா ரீ எண்ட்ரி ஆன ’36 வயதினிலே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த சூர்யாவின் தந்தை சிவகுமார், சூர்யா-ஜோதிகா தம்பதிகளின் குழந்தைகள் தேவ், மற்றும் தியா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர்கள் பாலா, வெங்கட்பிரபு, பாண்டிராஜ் ஆகியோர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது, ” தமிழில் தற்போது பெண்களை மையமாக வைத்து அதிக திரைப்படங்கள் உருவாகும் நிலை இல்லை. மலையாளம், தெலுங்கு, இந்தியில் போல் தமிழில் ஏன் இந்த நிலை உள்ளது என்பதற்கு காரணம் தெரியவில்லை. இந்த சூழலில் பெண்ணை மையமாக வைத்து இப்படி ஒரு கதையின் பின்னணியில் மீண்டும் நடிக்க வந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இதற்கு பின்னணியாக இருப்பது கூட்டு உழைப்புதான். மேலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தான் என் உலகம். சென்னைக்கு புதிதாக வந்தபோது நான் சந்திந்த முதல் மனிதர் அவர்தான். அப்போது முதல் இப்போது வரை எல்லா வகையிலும் ஒரு தூண் மாதிரி இருப்பது அவர்தான். கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அவரை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன்’’

இதே விழாவில் சூர்யா பேசும்போது, “என்னுடைய ரசிகர்கள் கடந்த 8 ஆண்டுகளாகவே படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் என்னை பார்க்கும்போது ‘‘ஜோதிகா நடிப்பதை ஏன் தடுத்துவிட்டீர்கள்’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இது மாதிரி சரியான கதை அமையும் நேரத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வரைக்கும் தொட்டுவிட்டோம் என்று கூறினார்

மேலும் இந்த விழாவில் இயக்குனர் பாலா, வெங்கட்பிரபு, பாண்டிராஜ் ஆகியோர்களும் பேசினர். அவர்கள் பேசியதாவது:

பாலா: நான் ஜோதிகாவின் ரசிகன். நான் இந்த விழாவுக்கு சூர்யாவுக்காக வரவில்லை. ஜோதிகாவின் ரசிகன் என்ற முறையில்தான் வந்தேன்.

வெங்கட்பிரபு: ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அதிக சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். ஆனால், இதில் சூர்யா ரொம்பவும் பெஸ்ட். ஜோதிகாவை ரொம்பவும் சந்தோஷமாக வைத்திருக்கிறார். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்

பாண்டிராஜ்: சூர்யாவின் 2D நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படமான ‘ஹைக்கூ’ படத்தை நான் தான் இயக்குகிறேன். ஆனால் 36 வயதினிலே’ முதலில் வெளிவந்துவிட்டது. என்னுடைய ஹைக்கூ’ படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. எதிர்காலத்தில் கண்டிப்பாக ஜோதிகாவை வைத்து படம் இயக்குவேன்.

English Summary : In “36 vayathinilea” film, Jothika say that the first person she met in Chennai is Surya and till now he also gives a great support to her.