அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு நடப்பு நிதியாண்டில் 10 லட்சம் இலவச ‘செட் – டாப் பாக்ஸ்’கள் வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அரசு கேபிள் ‘டிவி’ அதிகாரிகள் கூறியதாவது: அரசு கேபிள் ‘டிவி’ சேவையை பெற விண்ணப்பித்த 47 லட்சம் பேரில் 36 லட்சம் பேருக்கு ‘செட்- டாப் பாக்ஸ்’கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் ஒரு லட்சம் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன.

நடப்பு நிதியாண்டுக்குள் மேலும் 10 லட்சம் இலவச செட் – டாப் பாக்ஸ்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதனால் அரசு கேபிள் ‘டிவி’யின் வருவாய் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *