அதிமுக மகளிர் அணியின் சார்பில் தமிழகத்தில் 10 இடங்களில் சமீபத்தில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் சுமார் 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.

மேலும் கடந்த 6ஆம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற பரிசோதனை முகாமில் மட்டும் 2,037 பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டதாகவும், இது ஒரு உலக சாதனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரே இடத்தில் 971 பேர் மார்பக பரிசோதனை செய்து கொண்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது என்றும், அந்த சாதனையை தர்மபுரி பெண்கள் முறியடித்துள்ளதாகவும், அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்காக கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நடுவர் லூசியா சினிகக்லிஸ் அவர்கள் வழங்கிய சான்றிதழை, நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி. அவர்கள் பெற்றுக்கொண்டார்.

English Summary : Breast cancer diagnostic testing centers are conducted in Tamil Nadu. More than 16,000 women are participated, in which 2,056 women are from Dharmaburi, which turns out to be a World Record.