rajeshlakhoniஒரு தொதியில் போட்டியிடும் எந்த அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். நோட்டாவுக்கு பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களித்து நோட்டா வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்று இதுவரை யாரும் அறிந்ததில்லை. அப்படியொரு அனுபவம் தமிழக வாக்காளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் நோட்டா குறித்த ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அதாவது எந்தக்கட்சிக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா சின்னத்தில் (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்களித்து விடுங்கள் என்ற தகவல் பரப்பப்படுகிறது. மேலும், ‘‘நோட்டா என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியலை சுத்தம் செய்யும் சின்னம் நோட்டா. எப்படி என்றால், நோட்டாவில் மட்டும் 35 சதவீத ஓட்டுகள் பதிவாகிவிட்டால் போதும். அந்தத் தேர்தலில் எந்தக் கட்சி பெற்ற வெற்றியும் செல்லாததாகிவிடும். அந்தத் தேர்தலில் போட்டியிட்ட எந்தக்கட்சியும் மீண்டும் போட்டி போட முடியாது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது.

எனவே 6 மாத காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும். அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வகையில் அரசியல் தூய்மையாகிவிடும். இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம். இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள், இப்படிக்கு உங்களில் ஒருவன்’’ என்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ’இதுபோன்ற தகவல்கள் புரளி மட்டுமல்லாமல் தவறான தகவலுமாகும். தேர்தல் தொடர்பாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் இதுபோன்ற புரளிகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

English Summary: If the Nota is won presidential rule? Description of the electoral officer Rajesh lakkani.