இந்திய கிரிகெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி பயணத்தை துவக்கிவுள்ளனர். 2015 உலககோப்பையை முன்னிட்டு உலகெங்கும் இருக்கும் கிரிகெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் குவிய துவங்கிவுள்ளனர்.

இந்தியர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு 37% சதவிதம் பேர் அதிகமாக சுற்றுலா இசைவுச்சீட்டு அனுமதிகேட்டு ஆஸ்திரேலிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12,176 பேர் இசைவுக்சீட்டு அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

நியூசிலாந்து அரசும் ஆஸ்திரேலியா இசைவுச்சீட்டு உள்ளவர்களுக்கு தங்கள் நாட்டிலும் அனுமதி வழகப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஜன.26 முதல் ஏப்ரல்.5 வரை வழங்கப்படும்.

English Summary: Indian Cricket fans start travel to Australia and New-Zealand to watch World Cup.