டில்லி: ரயில் வருகை குறித்து அறியும் வகையில் இந்தியன் ரயில்வே வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து உள்ளது. இந்த எண் மூலம் ரயிலின் வருகை குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளது. பொதுவாகவே நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு வருவதில்லை. இதன் காரணமாக ரயிலின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளா வார்கள்.

இதை தடுக்கும் பொருட்டு, ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ளும் வகையில், இந்தியன் ரயில்வே புதிய வாட்ஸ்-அப் நம்பரை அறிவித்துள்ளது. அதன்மூலம் ரயிலின் வருகை குறித்து பயணிகள் அறிந்துகொள்ள முடியும். இதற்கான ‘7349389104’ என்ற மொபைல் எண்ணை அறிமுகபடுத்தியுள்ளது.

மேலே உள்ள எண்ணை தங்களது மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ்-அப்பில் சென்று சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு பயணிகள் தாங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயிலின் எண்ணை அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் பயணிகளின் வாட்ஸ் அப்பில் ரயில் எண், அதன் பெயர், எப்போது ரயில் புறப்பட்டது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டி உள்ளது,அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் குறுச்செய்திகளாக பெற முடியும்.

இந்த சேவையை இந்தியன் ரயில்வே துறை, ‘மேக் மை டிரிப்’ உடன் இணைந்து அளிக்கிறது. இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *