காற்றழுத்தத் தாழ்வு நிலை லட்சத்தீவு அருகே உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நீடித்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது லட்சத்தீவு அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது.

இந்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும்,வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் ஏலகிரி,வாணியம்பாடி ஆகிய இடங்களில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் பருவமழை வரும் 5 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: New Low Pressure Level formed near Lakshadweep Islands.