தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான் போன்ற படிப்புகளுக்கு கடந்த மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இந்த பொது நுழைவுத் தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவ, மாணவியர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் ஜி.நாகராஜன் நேற்று செய்தியாளர்களிடம் தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து கூறியதாவது: இந்த தேர்வின் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

English Summary: When did the results are going to release for TANCET Entrance Exam?