சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங் நாளை நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், இதுகுறித்து முக்கிய உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களும் நாளை நடக்கவுள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 63 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடத்தினாலும், மாணவர்களுக்கு அனுமதி கடிதம் தர வேண்டாம்” என உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary : A new order has been passed by Madras High Court regarding MBBS counselling.