கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் லாரி மோதி விபத்தில் பலியானார். நடைபாதையில் கடைகள் அதிகமாக இருந்ததால், மூட்டை தூக்கும் தொழிலாளி லாரிகள் செல்லும் சாலை வழியில் சென்றதாகவும், நடைபாதை கடைகளை அகற்றினால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 7வது மற்றும் 14-வது நுழைவு வாயிலில் உள்ள நடைபாதை நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளும் தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary : Pavement shops disposed in Koyambedu market.