1915யில் மகாத்மா காந்தி மீண்டும் இந்தியா திரும்பியததை நினைவு கொள்ளும் விதமாக தபால் துறை இன்று இரு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 9, 1915யில் காந்தி மும்பை அப்பல்லோ பந்தரில் வந்து இறங்கினார்.

இந்த முத்திரையின் ஒரு ஆல்பத்தை, அண்ணா சாலையில் தபால்தலை சேகரிப்பு பணியகம் நிகழ்வின் போது காந்தியின் முன்னாள் உதவியாளர் கல்யாணத்திடம் அன்பளிப்பாக அளிக்க உள்ளனர்.