சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரும்பிய மோனோ ரெயில் திட்ட வழித்தடப் பாதைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். போக்குவரத்து நெருக்கடி நிறைந்த போரூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி பாதையில் மோனோ ரெயில் திட்டம் தொடங்குவது சாத்தியமில்லை.

அங்கு 4-வது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைத்து மெட்ரோ ரெயில் விட அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்தனர். கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. உலக வங்கிகள் நிதி உதவி மூலம் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் அதிகாரிகள் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *