பேங்கிங் அப்ளிகேஷன்களை அனைத்து வங்கிகளும் இலவசமாக வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் அதன் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

பேங்கிங் அப்ளிகேஷன்களின் பாதுகாப்பினை ஆய்வு செய்த மும்பை ஐஐடி-யின் சார்பு நிறுவனமான வெஜிலென்ட் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைசிறந்த 100 வங்கிகளின் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது அதன் அறிக்கை.

இந்த ஆய்வு குறித்து, வெஜிலென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி துஷேந்திர ஷர்மா கூறுகையில், “70 சதவீத அப்ளிகேஷன்கள் ஹேக்கர்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இதில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டது இந்திய வங்கிகளுக்கான பேங்கிங் அப்ளிகேஷன்கள். இந்த ஆய்வின் முடிவில், பேங்கிங் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பானது என்ற நம்பிக்கை தகர்த்துள்ளது” என்றார்.

மொபைல் பேங்கிங் ஹேக்கர்களிடமிருந்து இந்திய வங்கிகளை பாதுகாக்கும் நோக்கத்தில், ஆப்விஜில் என்ற இலவச அப்ளிகேஷனை வெஜிலென்ட் 2016-ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Mumbai-IIT firm’s pro vigilant runs a Check on Security level for application. Report says that more than 70% are hackable, and 30% of them are Banking applications.