கடந்த மாதம் அளவுக்கு அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கி பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்தது. மழை குறித்த வானிலை அறிக்கையை சென்னையில் உள்ள வானிலை மையம் அவ்வப்போது தகவல் கொடுத்த போதிலும் துல்லியமாக இந்த பகுதியில் இத்தனை செண்டிமீட்டர் மழை பெய்யும் என்று கூறவில்லை. அதற்கு நவீன வசதிகள் இல்லாததே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த குறையை போக்க, எதிர்காலத்தில் எந்த பகுதியில் எந்தளவு மழை பெய்யும் என்று துல்லியமாக கணிக்க புதிதாக நவீன மயமாக்கப்பட்ட ரேடார் ஒன்றினை நிறுவ வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன் சென்னை தலைமைச்செயலகம் நிறுவப்பட்ட டாப்ளர் ரேடார் அகற்றப்பட்டு விரைவில் நவீன ரேடார் ஒன்றை அமைக்கவுள்ளதாக இந்திய வானிலை மைய துணை டைரக்டர் ஜெனரல் எஸ்.பாபுலேயன் தம்பி அவர்கள் கூறியுள்ளார். வானிலை பற்றிய துல்லியமான தகவல்களை பெறவும், மழைஅளவை மிகச் சரியாக கணக்கிடவும் இந்த நவீன புதிய ரேடார் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

English Summary: Modern radar to accurately calculate the amount of rain in Chennai.