ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்துடன் ஒரே புத்தகமாக வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2 புத்தகங்களாக இருக்கக்கூடிய ப்ளஸ் 2 வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவம் ஏப்ரல் மாதத்தில் முடிய உள்ளதாகவும், அதன் பிறகு அச்சடிப்பிற்கு செல்லும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. 2 புத்தகங்களாக இருக்கக்கூடிய ப்ளஸ் 2 வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *