சென்னையிலேயே 2வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும் கட்டப்பட்டு வரும் நிலையம், ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது.
