Kapaleeshwararசென்னையில் உள்ள கோயில்களில் முக்கிய கோயிலாக விளங்கி வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மார்ச் 21ஆம் தேதி பங்குனித்திருவிழா தொடங்குகிறது. இந்த விழா மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற இருப்பதை அடுத்து இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதால் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

திருவிழா நாட்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு வரையிலும், சித்ரகுளம் கீழ் தெருவில் இருந்து சித்ரகுளம் வடக்குத் தெருவரையிலும், நடுத் தெரு, சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு வரையிலும், ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு வரையிலும், புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலை சந்திப்பு வரையிலும், டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரையிலும், லஸ் சந்திப்பில் இருந்து ஆர்.கே. மடம் சாலை வரையிலும் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

அதேபோல் மார்ச் 20ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனால் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மார்ச் 21ஆம் தேதி வரை அறுபத்துமூவர் வீதி உலாவையையொட்டி பிற்பகல் 2 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் அந்தப் பகுதியில் முழுமையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இதன்படி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, புனிதமேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளியை அடையலாம்.

அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, வி.கே.அய்யர் சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை, கற்பகம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ்ûஸ அடையலாம்.
மயிலாப்பூர் கோயில் குளம் தெருவில் உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலை அமிர்தாஞ்சன் நிறுவனம் அருகே மாற்றப்படும். இதே அறுமூவத்து மூவர் பெருவிழா நடைபெறும் நாளன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Panguni Festivel in Mylapore kapaleeswarar Temple.Change in Traffic.