railwayசர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு தகுந்தவாறு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து கொண்டிருக்கின்றது. அதேபோல் டீசல் விலைக்கு தகுந்தவாறு ரெயில்வே கட்டணங்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்திய ரெயில்வே இதை நடைமுறைத்தப்படுத்தவில்லை.

இதுகுறித்து விசாரணை செய்த பாராளுமன்ற குழு கடந்த சில மாதங்களாக டீசல் விலை பெருமளவு குறைந்துள்ள நிலையில் ரெயில்வே கட்டணம் மட்டும் குறைக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி கட்டணங்கள் இரண்டு முறை ஏன் உயர்த்தப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. சமீபத்தில் ரயில்வே கட்டணங்கள் முதல் முறை 2 சதவீதமும் இரண்டாவது முறை 4.2 சதவீதமும் உயர்த்தப்பட்டது ஏன் என்றும் பாராளுமன்ற குழு கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே இனியாவது டீசல் விலை குறைந்திருப்பதற்கு ஏற்ப கட்டணத்தை குறையுங்கள் என்று அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

English Summary:Parliamentary committee to reduce the price of diesel fare According to the Rail Fare.