petrolandieselpriceஎண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி வரும் நிலையில் இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 26 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளதால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.15 காசுகளாக அதிகரிக்கும். அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 26 காசுகள் உயர்ந்துள்ளதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.78 காசுகளாக அதிகரிக்கும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது நுகர்வோர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணேய் பீப்பாய் ஒன்றுக்கு 47.43 அமெரிக்க டாலராக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Petrol, Diesel Price hike From Today Onwards.