petrolகடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்துள்ளதை அடுத்து இந்தியாவிலும் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் குறைந்ததை அடுத்து கடந்த 15ஆம்தேதி ஏற்கனவே பெட்ரோ மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக மிண்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் பீப்பாய் ஒன்றுக்கு 44 டாலரில் இருந்து 28 டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ.1820 குறைந்துள்ளது. இதனால்  பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பின்படியே பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் குறைத்திருப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை குறைப்பின் மூலம் டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.20-ல் இருந்து ரூ.61.20 ஆக குறைக்கப்படும். ஒரு லிட்டர் டீசல் தற்போது 44.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் ரூ.44.45க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் டீசலின் விலை ரு.46.08க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டீசலின் விலை ரூ.45.58ஆக குறைந்துள்ளது. அதேபோல் பெட்ரோலின் விலை ஆகஸ்ட் 15 முதல் ரூ.63.49க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முதல் சென்னையில் பெட்ரோலின் விலை ரூ.61.49க்கு விற்பனை செய்யப்படும்.

English Summary:Petrol-diesel price reduction for crude oil fall. What is the new price?