சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செல்லும் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படவுள்ளது.

சென்னை அருகே உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்து கொள்கிறாா்.

இதற்காக அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் வருகிறாா்.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று இன்றிரவு தங்குகிறார். இதற்காக இன்று மாலை சுமார் 6.30 மணியிலிருந்து 7.30 மணிவரை குடியரசுத் தலைவர் பயணிக்கு ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

அதேபோல், நாளை காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். இதற்காக நாளை காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை கிண்டி – உத்தண்டி வரையிலான சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

அங்கிருந்து காலை 11.30 மணியளவில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு 12.30 மணியளவில் வருகிறார். அந்த நேரத்திலும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

குடியரசுத் தலைவா் வருகை தரும் நிலையில் அவா் தங்க உள்ள தமிழக ஆளுநா் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவா் வருகைக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் சாலை வழியாக பயணம் மேற்கொள்ளவுள்ளதால், சென்னை வாகன ஓட்டிகள் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *