தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேஷ், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், விஜயவாடாவைச் சேர்ந்த ஜெய ஞானவேல் ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,723 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ் படிப்பிற்கு 1,055 இடங்கள் உள்ளன. 2 இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27,450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.

English Summary : Ranking for Medical studies announced.