ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் அனைத்து வகை குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான குறைதீர் கூட்ட முகாம் 14-ந்தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன் விவரம்:

  • பெரம்பூர் மண்டலம், சென்னை நடுநிலைப்பள்ளி, 22/26, செய்யூர் பார்த்தசாரதி தெரு, பெரம்பூர்;
  • அதுபோல், ராயபுரம் மண்டலம், சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 212, சஞ்சீவராயன் கோவில் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை;
  • சிதம்பரனார் மண்டலத்துக்கான ரேஷன் அட்டைதாரர்கள், சென்னை நடுநிலைப்பள்ளி, வாத்தியார் கந்தப்ப தெரு, சூளை என்ற முகவரியில் நடக்கும் முகாமில் தங்கள் ரேஷன் அட்டை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம்.
  • பரங்கிமலை மண்டலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 37, காலேஜ் ரோடு, பழவந்தாங்கல்;
  • அண்ணாநகர் மண்டலம், சென்னை நடுநிலைப்பள்ளி, 286, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை அமைந்தகரை;
  • அம்பத்தூர் மண்டலம், பெருந்தலைவர் காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பூங்கா தெரு, வடக்கு, வெங்கடாபுரம் அம்பத்தூர்;
  • வில்லிவாக்கம் மண்டலம் கொளத்தூர் டேனியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, 55/10, 5-வது குறுக்கு தெரு, கம்பர் நகர்;
  • தாம்பரம் மண்டலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் சாலை, அனகாபுத்தூர்;
  • திருவொற்றியூர் மண்டலம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி சிபிசிஎல் நகர், ஆமுல்லைவாயில், மணலி;
  • தியாகராய நகர் மண்டலம், அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி, பி.வி.ராஜமன்னார் சாலை, விஜயராகவபுரம், சாலிகிராமம்;
  • ஆவடி மண்டலம், மோரே ஊராட்சி சமுதாயகூடம் வீராபுரம்;
  • மைலாப்பூர் மண்டலம் சென்னை மாநகராட்சி 152-வது வார்டு அலுவலகம், 8வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு;
  • சைதாப்பேட்டை மண்டலம், அட்வென்ட் கிறிஸ்துவ தொடக்கப்பள்ளி, காந்திரோடு, வேளச்சேரி;
  • ஆயிரம்விளக்கு மண்டலம், சென்னை உயர்நிலைப்பள்ளி, 4 ஸ்டரான்ஸ் ரோடு, பட்டாளம்;
  • சேப்பாக்கம் மண்டலம், சென்னை நடுநிலைப்பள்ளி, 51, பங்காரு தெரு, சேப்பாக்கம்; சோழிங்கநல்லூர் மண்டலம், சென்னை மாநகராட்சி 14-வது மண்டல அலுவலகம், மடிப்பாக்கம்;

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Making changes to the ration card and the public distribution system witll be held on 14th Care Summit Camp (tomorrow)at 10 am of this month.