sbiதற்போதைய இணைய உலகில் பொதுமக்கள் பஜார்களுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்கின்றனர். இதற்காக பல ஆன்லைன் இணையதளங்கள் சிறந்த சேவையை செய்து வருகின்றன. இந்த பொருட்களை பொதுமக்கள் தங்களுடையை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைனில் பொருட்களை எளிதாக வாங்கும் வகையில் ரூ.499 மதிப்பில் ‘சிம்ப்ளி க்ளிக்’ என்ற கடன் அட்டையை எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் ஓர் அங்கமாக விளங்கி வரும் ‘எஸ்பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமென்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் ‘சிம்ப்ளி க்ளிக்’ என்ற புதிய கிரெடிட் கார்டை நேற்று அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய கடன் அட்டையை எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் ஜசுஜா அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் முன்னணி கிரெடிட் கார்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ கார்டு, புதிதாக ‘சிம்ப்ளி க்ளிக்’ என்ற புதிய கிரெடிட் கார்டை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் ஆன்லைனிலேயே இருக்கும் இளைய தலைமுறையினரின் வசதிக்காக ரூ.499 என்ற குறைந்த விலையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொருட்களை வாங்க அமேசான் இந்தியா, புக் மை ஷோ, க்ளியர் ட்ரிப், ஃபுட் பாண்டா, ஃபேப் ஃபர்னிஷ், லென்ஸ்கார்ட், ஓலா மனி ஆகிய 7 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500-க்கான அமேசான் கிப்ட் வவுச்சர் வழங்கப்படும். இந்த கார்டு மூலம் ஓராண்டில் ரூ.2 லட்சம் வரை செலவு செய்தால், ரூ.4 ஆயிரத்துக்கு கிப்ட் வவுச்சர் வழங்கப்படும். இந்த கார்டை பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் 2.5 சதவீதம் வரி தள்ளுபடி சலுகை பெறலாம்.

தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கை சிம்ப்ளி க்ளிக் அட்டை மூலம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு விஜய் ஜசுஜா கூறியுள்ளார்.

English Summary:SBI Cards Introduced a Product to Buy a Online ‘Simply click’ Credit Card.