சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உதவி கேட்டு பேசும் பொதுமக்களிடம் கனிவாக பேசி உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை போலீசாருக்கு, நேற்று விசேஷ பாடம் நடத்தப்பட்டது.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலைபேசி எண் 100 என்ற எண்ணுக்கு ஏராளமான பேர் தினமும் தொலைபேசியில் பேசி உதவி கேட்டு வருவது வழக்கம். இவ்வாறு உதவி கேட்கும் பொதுமக்களுக்கு, உரிய உதவி செய்யும்படி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். தினமும் இதுபோல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 100க்கும் மேற்பட்ட நபர்கள் உதவி கேட்டு பேசி, உரிய நிவாரணம் பெற்று வருகின்றனர். இவ்வாறு உதவி கேட்டு கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களுடைய பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் போலீசாருக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஏற்பாடு செய்தார்.

இதன்படி நேற்று காலையில் இருந்து மாலை வரை ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை நிபுணர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

English Summary: Special teachings for Police to speak sweetly to Public.