சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு  ரயில்களை தெற்கு ரயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க  அறிவித்து உள்ளது. இதில்,

 

 

 

  • திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06032), மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
  • திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்:06028, 06029), அன்றைய தினங்களில் மாலை 7 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்
  • திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 1 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06033), மறுநாட்களில் காலை 9.40 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல, சென்னையில் இருந்து ஏப்ரல் 2 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06034), மறுநாட்களில் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
  • திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06030), மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06031), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் (வண்டி எண் 06030 மாம்பலம் நிறுத்தத்திலும்) நின்று செல்லும்.
  • இந்த சிறப்பு ரயில்கள் கொல்லம், காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிறுத்தங்களில் (வண்டி எண் 06033 பெரம்பூரிலும்) நின்று செல்லும்.
  • சென்னையில் இருந்து ஏப்ரல் 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06036), மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களின் முன்பதிவும் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
  • நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-சென்னை எழும்பூர் ‘பிரீமியம்’ சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (00613), மறுநாள் காலை 7.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 21 ஆம் தேதி தொடங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
  • சென்னையில் இருந்து ஏப்ரல் 1, 2 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி ‘பிரீமியம்’ சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்கள் (00610, 00611 மற்றும் 00612), மறுநாள் காலை 9.05 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். 00610 மற்றும் 00611 ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. 00612 ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
  • எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06035), மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல், சென்னையில் இருந்து ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06036), மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.