தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் தென் தமிழக நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 9 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் ரயில் எண் 06002 என்ற சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும் ஏப்ரல் 10 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் ரயில் எண் 06003 என்ற சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary: Special Trains from Chennai Egmore to Tirunelveli is going start from tomorrow onwards. Tickets will be available from today onwards.