சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.

சீத்தாப்பழம்: தற்போது இந்த பதிவில், சீத்தாப்பழம் பற்றியும், அதன் ஆரோக்கியத்தை பற்றியும், அதன் மருத்துவ குணங்களையும் பற்றி பார்ப்போம். சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் முதலான ஊட்டச்சத்துக்கள் கொண்டது.

ஆஸ்துமா: ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு சீத்தாப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். சீத்தாப்பழத்தில் ஆஸ்துமா நோயை குணப்படுத்தக் கூடிய ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்து உள்ளது. இந்தப் பழம் நமது தசைப்பகுதிகளை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள மிகவும் உறுதுணையாக செயல்படுகிறது.

இரத்த அழுத்தம்: இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீத்தாப்பழம் சிறந்த தீர்வை தருகிறது. இந்த பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால், இது கொதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.

தலைமுடி பிரச்சனை: இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தலை முடி பிரச்னை தான். இதற்கு பலரும் செயற்கையான முறையில் தீர்வை காண விரும்புகின்றனர். ஆனால் சீத்தாப்பழத்தில் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளதால், தலைமுடி பிரச்சனைகளுக்கு, சீத்தாப்பழம் ஒரு சிறந்த தீர்வை தருகிறது.

கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் தங்களது, குழந்தைக்கும், தங்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில் சீத்தாப்பழம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதற்கேற்ற நல்ல சத்துள்ள பழம். இப்பழத்தை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வர, சிசுவின் வளர்ச்சி ஆரோக்கியமாக அமையும்.

உடல் எடை அதிகரிப்பு: உடல் மெலிவாக உள்ளவர்கள், உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், சீத்தாப்பழத்தை சதையை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பலத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இந்த பழத்தில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உள்ளத்தாற், இந்த பலத்தை அளவுக்கு மீறி சாப்பிடும் போது சர்க்கரையின் அளவு அதிகரித்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *