பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிகவும் குறைவு என்பதால் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மருத்துவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சர்வதேச பாலியல் ஆராய்ச்சி மையம் ஒன்று நடைபெறவுள்ளது. இதன்மூலம் பாலியல் நோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வடபழனி பகுதியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவனையில் இன்றும் நாளையும் அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 13ஆம் தேதி சர்வதேச பாலியல் ஆராய்ச்சி மையம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து டாக்டர் காமராஜ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.காமராஜ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “”மக்களிடையே பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் சனிக்கிழமை (பிப்.13), ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) ஆகிய இரண்டு நாட்கள் 8-ஆவது சர்வதேச பாலியல் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்திய பாலியல் சங்கம், உலக பாலியல் சங்கத்துடன் இணைந்து டாக்டர் காமராஜின் ஆண்களுக்கான மருத்துவ மையம் இந்த மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் கணேசன் பி.அடைக்கண் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகிறார்’ இவ்வாறு டாக்டர் காமராஜ் கூறியுள்ளார்.

English Summary: The International Center for Sexual Research in Chennai.