இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக திருவிழாக்களில் ஒன்றான கும்பகோணம் மகாமகம் திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கும்பகோணத்தில் குவியவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

1. நாகர்கோவில் – விழுப்புரம் சிறப்பு ரயில் 06189: பிப்ரவரி 21-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

2. ரயில் எண் 06190: பிப்ரவரி 22-ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லும்.

3. ராமேசுவரம் – விழுப்புரம் சிறப்பு ரயில் எண் 06191: பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

4. ரயில் எண் 06192: பிப்ரவரி 22-ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11.55 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். இந்த ரயில் மண்டபம், உச்சிபுலி, ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லும்.

5. திருச்சி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் எண் 06193: பிப்ரவரி 20-ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

6. ரயில் எண் 06194: பிப்ரவரி 23-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 11.10 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.25 மணிக்கு திருச்சி சென்றடையும்.

7. ரயில் எண் 06195: பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் இருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

8. ரயில் எண் 06196: பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலத்தில் நின்று செல்லும்.

9. கோவை – மயிலாடுதுறை சிறப்பு ரயில் எண் 06199: பிப்ரவரி 21-ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 2.40 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.

10. ரயில் எண் 06200: பிப்ரவரி 22-ஆம் தேதி மயிலாடுதுறையில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை சென்றடையும்.

11. ரயில் எண் 06201: பிப்ரவரி 23-ஆம் தேதி கோவையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

12. ரயில் எண் 06202: பிப்ரவரி 23-ஆம் தேதி மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில் வடகோவை, இருகூர், திருப்பூர், ஈரோடு, புகலூர், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்தில் நின்று செல்லும்.

மேற்கண்ட அனைத்து மகாமகம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

English Summary: Special Train details to Kumbakonam Maha Magam.