Ak26316உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பட்டியல் ஒன்றை பிரபல ஆங்கில இதழான ஃபார்ச்சூன் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த 50 பேர் பட்டியலில் பெயர் வகிக்கும் ஒரே இந்தியர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உலகை மாற்றவும், பிறருக்குத் தூண்டுகோலாகவும் இருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இந்த ‘World’s Greatest 50 Leaders’ என்ற பார்ச்சூன் இதழ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பிஸாஸ் என்பவர் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார். இந்த பட்டியலில் 47 வயதான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் 42ஆம் இடத்தில் உள்ளார். இந்தியாவிலிருந்து இவர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தவிர தெற்கு கரோலினா இந்திய-அமெரிக்க கவர்னர் நிக்கி ஹேலே 17-வது இடத்திலும் மற்றொரு இந்திய-அமெரிக்கர் ரேஷன் சவுஜனி 20-வது இடத்திலும் உள்ளனர்.

புதுடெல்லியில் மாசுக்கட்டுப்பாட்டு கொள்கையை தீவிரத்துடன் அமல்படுத்த வாகன ஒற்றை, இரட்டை இலக்க முறையை கொண்டு வந்ததற்காக அரவிந்த் கேஜ்ரிவால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இது குறித்து ஃபார்ச்சூன் கூறும்போது, “ஒற்றை, இலக்க எண் கொண்ட வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் சாலைகளில் அனுமதிக்கப்படும் இந்தத் திட்டத்தை ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்துடன் கேலி செய்தனர். ஆனால் இதனால் சாலையில் வாகன நெரிசல் குறைந்ததோடு காற்றில் மாசுத் துகள்கள் சேரும் விகிதம் ஒரு மணிநேரத்துக்கு 13% குறைந்தது. டெல்லிவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது” என்று கூறியுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் பத்து நபர்கள் பெயர்கள் பின்வருமாறு

1. அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பிஸாஸ்
2. ஜெர்மன் பிரதமர் அஞ்சேலா மெர்கெல்
3. மியான்மர் ஜனநாயக ஆதரவுத் தலைவர் ஆங் சூ கியி
4. போப்பாண்டவர் பிரான்ஸிஸ்
5. ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக்
6. ஆஸ்கார் விருது பெற்ற பாடகர் ஜான் லெஜெண்ட்
7. கிறிஸ்டியனா ஃபெகரீஸ் (Executive Secretary, UN Framework Convention on Climate Change)
8. அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பால் ரியான்
9. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி ருத் ஃபாடர் கிங்ஸ்பர்க்
10. வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா

English Summary: The only Indian in the list of the world’s greatest leaders.