ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆன்லைனில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களின் இடத்திற்கு கொண்டு செல்லும் டெலிவரி மற்றும் பேக்கிங் பணிகளுக்கு ஆட்கள் தேவைபடுகின்றனர். இந்த பணிகளுக்கு இன்னும் ஆறு மாத காலத்திற்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆட்கள் தேவைபடுவார்கள் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இ-காம்மர்ஸில் சிறந்து விளங்கும் எந்த நிறுவனமும் வர்த்தக சந்தையில் நிலைத்து நிற்க முடியும். ஆனால், சிறு மற்றும் பெரு நகரங்களில் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு யுக்திகளை கையாள வேண்டியுள்ளது. இந்த நிறுவனகள் தமக்கு போட்டியாக இருக்கும் நிறுவனங்களை முந்துவது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.

English Summary: Nearly one lakh peoples get jobs through online marketing within 6 months.