சென்னையில் சில்க் இந்தியா-2015 எனும் பட்டு தயாரிப்பு கண்காட்சி, மைசூரை சேர்ந்த ஹஷ்டஷில்பி நிறுவனம் சார்பில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி, பிப்ரவரி 1ம் தேதி வரை, தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இல்லை. 80க்கும் மேற்பட்ட கடைகளில் மைசூர், ஜார்ஜெட், ஷிபான், டசார், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், டிசைனர் பேன்சி புடவைகள், கோயில் பார்டருடன் மல்பெரி பட்டு, பனாரஸ் ஜாம்தானி, கைத்தறி புடவை, பட்டு மெத்தை உறைகள், டிசைனர் வேர், குர்திஸ் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

English Summary: Hashtashilpi Institute of Mysore sponcers Silk India -2015 expo has been engaged in Valluvar Kottam, Nungambakkam. The exhibition will take place between 10.30 am to 8.30 pm till Feb 1.