southern-railway-261115-1சென்னையின் முக்கிய பகுதியான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு வரும் 15ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கூட்ட நெரிசல் மிக்க நேரத்தில் சுமூகமான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் வகையில் டாக்சி, கால்டாக்சி உள்ளிட்ட வணிக ரீதியான வாகனங்கள் மூர்மார்க்கெட் காம்பிளக்ஸ் வழியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்படும். பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்கி விடுவதற்கும் தனி இட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். வாகனங்கள் நிறுத்துவதற்கும் கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும். ஆகவே டாக்சி, கால் டாக்சியை பயன்படுத்தும் பயணிகள் அல்லிக்குளம் சாலை வழியாக மூர்மார்க்கெட் காம்பிளக்ஸ் நுழைவு வாயிலை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த போக்குவரத்து மாற்றம் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) எங்களுடைய செய்திக்குறிப்பில் ஆகஸ்டு 15-ந்தேதி இந்த போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்று தவறாக குறிப்பிட்டு இருந்தோம். தற்போது ரெயில்வே பாதுகாப்பு படை அதை தெளிவுபடுத்தி தேதியை மாற்றி அறிவித்துள்ளது. இந்த தவறுக்கு வருந்துகிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Traffic Diversion on June 15 Onwards in Chennai Central. Southern Railway Announced.