வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் பேரழிவை சந்தித்துள்ள கேரளாவிற்கு பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகம், கேரளாவுக்கு உதவ முன்வந்தது. தங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு எப்போதும் பங்கு உள்ளதாக கூறிய ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்று தெரிவித்தார். இதற்காக சிறப்பு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

நிவாரணப்பணிகள், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பாக விவாதிப்பதற்கு, ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *