ECR-91215-1தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை மட்டுமின்றி கிழக்கு கடற்கரைச் சாலையையும் பயன்படுத்துவதற்கு வசதியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அச்சமின்றி தென்மாவட்ட வாகனங்களை அந்த பகுதியின் வழியாக இயக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்ததோடு அதன் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து சில நாட்கள் நிறுத்தப்பட்டது. மேலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்தும் மேல்மருவத்தூர் அருகே வந்தவாசி சாலையில் திருப்பிவிடப்பட்டு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை கோயம்பேட்டுக்கு கடந்த சில நாட்களாக சென்று வந்தன.

இந்நிலையில், நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறையினர் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைத்துள்ளதால், வாகன போக்குவரத்து திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ள தகவல்கள் முறையாக வாகன ஓட்டிகளுக்கு சென்றடையவில்லை. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசி கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த சாலைகள் வழியே வாகனங்கள் சென்னைக்கு தங்கு தடையின்றி செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
English summary-Vehicles from southern districts can go Chennai by ECR also