jayalalitha-91215-1வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட பல நகரங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர் விடுமுறை அளிக்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 7ஆம் தேதி ஆரம்பிக்கவிருந்த 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு வரும் ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்பு அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திட ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிய வருகிறது.

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English summary-Chief Minister Jayalalihaa explained that the announcement to postpone half-yearly examinations is applicable to all private schools also.