MRTS-23316சென்னையில் உள்ளஆஷ்ரயா மாற்றுத் திறன் மாணவர்கள் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும்.

மேலும் கோடைக்கால விடுமுறையையொட்டி, சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எந்தெந்த இடங்களுக்கு அதிக காத்திருப்பு பட்டியல் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. சுவிதா சிறப்பு ரயில்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் இருந்தாலும், அவற்றில் அனைத்து இடங்களும் நிரம்பிவிடுகின்றன’ என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மகளிர் நலச் சங்கத் தலைவர் சீமா ஜோரி, முதன்மை தலைமைப் பொறியாளர் கே.கே.குப்தா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English summary-Velachery-st.thomas mount MRTS by next year