vijay-201115இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா சென்றுள்ளனர். விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கவுள்ள இயக்குனர் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு விஜய் இருவேடங்களில் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அஜீத்தின் ‘வீரம்’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ‘விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும் இந்த படத்தின் படத்தொகுப்பாளராக பிரவீண் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ‘ஆரண்ய காண்டம்’ என்ற திரைப்படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது பெற்றவர் என்பதும் முதன்முதலாக விஜய் படத்தை படத்தொகுப்பு செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் படத்தை படத்தொகுப்பு செய்யவுள்ள இந்த தகவலை பிரவீண் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இளையதளபதி விஜய்க்கும், இயக்குனர் பரதன் அவர்களுக்கும் தான் நன்றி கூறிக்கொள்வதாகவும், விஜய் ரசிகர்களின் பாச மழையால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜய் 60′ படத்தின் இசையமைப்பாளர் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இசையமைக்க சந்தோஷ் நாராயணன், அனிருத் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இவர்களில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதிய கீதை’ படத்திற்கு பின்னர் விஜய் படத்திற்கு இசையமைக்கவில்லை. சந்தோஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டால் அவர் இசையமைக்கும் முதல் விஜய் படம் இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மதி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் 2016 தீபாவளி தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.english summary-Details about vijay’s 60th movie